22 July 2017

21ஆம் நூற்றாண்டிலும் சமூக அநீதி தொடரவேண்டுமா?

தமிழ் மக்களிடையே காணப்பட்ட அநீதியான சமூக பிளவுகள் 70 ஆம் ஆண்டுகளில் இடதுசாரிக் கட்சிகளினாலும் 80ஆம் ஆண்டுகளின் பின்னர் ஈழ விடுதலை இயக்கங்களினாலும் பெருமளவு மாற்றம் கண்டுள்ளது.  ஆனால் தமிழ் பாரம்பரிய அரசியல் கட்சிகளில் அவை தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து இன்றுவரை சமூக மேலாதிக்கமே மேலோங்கியுள்ளது. அவை அவ்வப்போது மிதவாதத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை பிரதிபலிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது . அதன் ஒரு வெளிப்பாடே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இழிவானவார்த்தை பிரயோகமாகும்.

குறிப்பாக தென்பகுதி வன்செயல்களினால் பாதிக்கப்பட்டு  வடக்கு நோக்கி வந்த மலையக மக்களை திட்டமிட்டு வளமற்ற பிரதேசங்களில் குடியேற்றி அவர்களை எப்பவும் மேட்டுக்குடியினருக்கு சேவகம் செய்யும் ஒரு சமூகமாக வைத்திருக்கவே அப்போது அரசியல் அதிகாரத்துடன் இருந்த தமிழ் பிரதிநிதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எண்பதுகளில் தோற்றம் பெற்ற விடுதலை இயக்கங்களின் கொள்கை நிலைப்பாடு காரணமாக இம்மக்கள் ஒரளவு கல்வி பொருளாதாரம்  சமூகநிலைகளில் குறிப்பிடத்தக்க அளவு மேம்பாடு கண்டிருந்தனர்

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் சனத்தெகையில் கணிசமான எண்ணிக்கையிலுள்ள மலையக சமூகத்தின் முன்னேற்றத்தை 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் நாம் பல மேம்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக மலையக மக்கள் செறிவாக வாழும் கிராமங்களுக்கு புதிய பாடசாலைகள்,  மின்விநியோகம், வீதிகள், வீட்டுத்திட்டம் போன்ற உட்கட்டுமானங்களுக்கும் அரச தனியார்துறை வேலைவாய்ப்புகள் அரசியல் பிரதிநிதித்துவம். வர்த்தக, அபிவிருத்தி, காணி  உருமங்கள் மற்றும் வாழ்வாதாரம்  போன்றவற்றை  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் முன்னுரிமை அளித்து பெற்றுக்கொடுத்துள்ளோம்.

மாறாக பாரம்பரிய தமிழ் கட்சிகள் அம்மக்களின் வாக்குளை போலித்தேசியம் பேசி கொள்ளையடித்தார்களே தவிர அவர்களின் வாழ்வியல்  முன்னேற்றத்திற்தாக ஒரு துரும்பைத் தன்னும் அசைக் கவில்லை

எனவே எந்தவொரு சமூகத்தின் மீதான எந்த வகையான தாக்குதல்களை யார்செய்தாலும் அச்செயலை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வண்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் ஒடுக்கப்படும் மக்களுக்காக கடந்தகாலங்களை போலவே எதிர்காலத்திலும் பக்கபலமாக இருப்போம் என இச்சந்தர்ப்பத்தில் மீளவும் தெரிவித்துகொள்கின்றோம்.

No comments:

Post a Comment