24 March 2017

அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் - டியூ குணசேகர

அனைத்து கட்சிகளும் அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்

இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து இன கட்சிகளும் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றின. அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு குழுக்கள் அமைத்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து சட்டமூலம் தயாரிக்க இருக்கின்றது. ஆனால் சட்டமூலம் தயாரிக்கப்பட முன்பே அரசியலமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. 

அரசியலமைப்பில் ஏற்படுத்தக்கூடிய திருத்தத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவதாக இருந்தால் அதனை பாராளுமன்றத்தில் முன்வைத்து அது தொடர்பாக திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஆனால் தற்போது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் கருத்து வேறுபாடுகள் வீணாக காலத்தை தாழ்த்துவதாகும் அத்துடன் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்பதுவே எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதனை நாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளோம்.

குறிப்பாக சிங்கள மொழி 1956ஆம் ஆண்டு அரச கரும மொழியாதக்கப்படுகின்றபோதும் 1987ஆம் ஆண்டே தமிழ் மொழி அரசகரும மொழியாக்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் மொழி அரசகரும மொழியாக நிறைவேற்றப்பட்டு 30வருடங்கள் கழிந்தும் இன்னும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை.அதனால் நாட்டு மக்கள் அனைவரும் சம உரிமைகளைப்பெற்றவர்கள் என்பது தெளிவாவதில்லை.

சிறுபான்மை இன மக்களும் இந்த நாட்டு பிரஞைகள் என்றவகையில் அவர்களுக்கும் அரசியலமைப்பினூமாக சம உரிமை வழங்கப்படவேண்டும். இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். அத்துடன் நாட்டுக்குள் இன, மதங்களுக்கிடையில் பிரச்சினை ஏற்படுமானால் நாட்டை ஒருபோதும் அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல முடியாதென இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர மேலும் தெரிவித்தார்.

நன்றி- வீரகேசரி

No comments:

Post a Comment