30 November 2016

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பில் 8,000 முறைப்பாடுகள்

“இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும், 3,264 முறைப்பாடுகள் தொடர்பிலேயே, ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது” என, அவ்வாணைக்குழுவின் தலைவர் நெவில் குருகே தெரிவித்தார். நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால், ஊடகவியலாளர்களுக்காக நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   அங்கு அவர், தொடர்ந்து கூறியதாவது,   “எமது ஆணைக்குழுவுக்கு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் எமது ஆணைக்குழுவுடன் தொடர்புடைய 3264 முறைப்பாடுகள் தொடர்பிலேயே நாம் விசாரணையை முன்னெடுத்து வருகின்றோம்.   எமது ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கமைய, ஒவ்வொரு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மொத்தமாக 431 அதிகாரிகளை நியமிப்பதற்கான தேவை உள்ளது. எனினும், தற்போது எம்மிடம் மொத்தமாக 196 அதிகாரிகளே கடமையாற்றி வருகின்றனர். அதிலும், சில அதிகாரிகள், மற்றைய சில விசாரணைகளுக்காக சென்றுவிட்டால், 150 அதிகாரிகளே கடமையில் ஈடுபட்டிருப்பர்” என்றார். 

No comments:

Post a Comment