12 October 2016

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும்

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை கோரி தொடர்ச்­சி­யாக நடத்தி வரும் போராட்டம் நியா­ய­மா­னது. அதற்கு எமது பூரண ஆத­ரவை வழங்­கு­கின்றோம் எனத்­தெ­ரி­வித்­துள்ள பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் உட்­பட சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­புக்­களும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
ஆயிரம் ரூபா சம்­பள அதி­கா­ரிப்பை வலி­யு­றுத்தி தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் போராட்டம் தொடர்ந்­த­வண்­ண­மி­ருக்­கின்ற நிலையில் அது குறித்து கருத்து வெளி­யிட்ட பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவா மேலும் தெரி­விக்­கையில்,தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை பெற்­றுக்­கொ­டுப்­ப­தாக வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போதும் அது நிறை­வேற்­றப்­ப­டாத நிலை­மையே தொடர்ச்­சி­யாக இருக்­கின்­றது. அதே­போன்று தான் கூட்டு ஒப்­பந்­தமும் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யா­கி­விட்­டது. அந்த ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வதில் தொடர்ச்­சி­யான இழுத்­த­டிப்­புக்கள் நீடித்­த­வண்­ண­மி­ருக்­கின்­றன.
இவ்­வா­றான நிலை­யி­லேயே தமக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திக்கு அமை­வாக ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை கோரி போராட்­டத்தை ஆரம்­பித்து தொடர்ச்­சி­யாக அதில் ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். அவர்­களின் போராட்டம் நியா­ய­மா­னது. வடக்கு கிழக்கை பிர­தி­நி­தி­தித்­து­வப்­ப­டுத்தும் எமது கூட்­ட­மைப்பு அந்தப் போராட்­டத்­திற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­கின்­றது. அவர்­களின் கோரிக்­கைகள் உட­ன­டி­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டி­ய­தா­க­வுள்­ளன.
ஆட்­சியில் உள்ள அர­சாங்கம் மற்றும் மலை­யக கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள் என அனைத்து தரப்­பி­னரும் தோட்­டத்­தொ­ழி­லாளி ஒரு­வ­ருக்கு நாளொன்­றுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு முன்­வ­ரு­வ­தோடு கூடுதல் கவனம் செலுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யுள்­ளது. தற்­போது நாளொன்­றுக்கு 730ரூபா சம்­ப­ளத்தை வழங்­கு­வ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் ஏனைய பெருந்­தோட்ட தொழிற்­சங்கங்­க­ளுடன் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
தற்­கா­லிக தீர்­வாக இவ்வாறு இணக்கப் பாடு எட்டப்பட்டிருந்தாலும் அந்த தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் ஆயிரம் ரூபா சம்பள அதிக ரிப்பை பெற்றுக்கொடுக்கவேண்டும். 

அதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு மையான ஆதரவை வழங்க தயாராகவுள்ளது என்றார். 

No comments:

Post a Comment