30 August 2016

ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் அதிகாரங்கள் பகிரப்படுவதை சகலரும் ஆதரிக்க வேண்டும்

தமிழ் மக்கள் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்­ப­டு­வதை விரும்­ப­வில்லை. எனவே இனி­வரும் காலங்­களில் இது தொடர்பில் நாட்டின் இளைஞர், யுவ­தி­க­ளையும் வலி­யு­றுத்த வேண்­டு­மென கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சி தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்  மாத்­த­றையில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, கடந்த காலத்தில் இடம்­பெற்­றது போன்­ற­தொரு யுத்தம் எமது நாட்டில் மீண்டும் இடம்­பெறக் கூடாது. அதனை நாட்டில் வாழும் தமிழ் மக்­களும் விரும்­ப­வில்லை. அது தொடர்பில் நாட்டின் இளைஞர், யுவ­தி­களுக்கும் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். மீண்டும் ஒரு யுத்­தத்­தினை ஏற்­ப­டுத்­தி­விட்டு அதனால் அவர்கள் பாதிப்­ப­டைய வேண்­டிய தேவையும் தற்­போது இல்லை. மாறாக அனைத்து சமூ­கங்­களும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வதால் மட்­டுமே நாட்­டையும் நாட்டு மக்­களின் வாழ்க்கைத் தரத்­தி­னையும் மேம்­ப­டுத்த முடியும்.
தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான அதி­கா­ரங்­களை நீதி­யான முறையில் பகிர்ந்­த­ளிப்­பதே அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் பிர­தான நோக்­க­மாகும்.குறிப்­பாக ஒன்­று­பட்ட இலங்­கையின் கீழ் மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்து அரசியலமைப்பு புத்துருவாக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் சகலரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment